top of page

மூளைக்குள் சுற்றுலா | Moolaikkul Sutrula - பக்கங்கள் 626

SKU: CSV0001083
₹1,500.00Price

மூளைக்குள் சுற்றுலா | Moolaikkul Sutrula

V.Iraianbu / வெ.இறையன்பு

 

இந்த பிரம்மாண்டமான நூல் விஞ்ஞானத்தமிழ் உலகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வு . மூளை என்ற வியப்பூட்டும் , பிரமிக்கவைக்கும் உலகத்திற்குக் கரம் பற்றி நம்மை நடைபழக்கும் இனிய சுற்றுலா . விஷய அடர்த்தி , சிந்தனைச் செறிவு , புகைமூட்ட உலகிற்குத் தெளிவு நல்கும் சால்பு , விஞ்ஞானத்தைச் சுவையுடன் குழைத்துத் தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் சிறப்பு , விஞ்ஞானத்தை வாழ்வியலுடன் இணைத்து நம் ஆளுமைக்கு வளமூட்டும் பாங்கு , இந்தக் காரணிகள் வாசிப்பு அனுபவத்திற்குச் செழுமையையும் , சுவையையும் . வாழ்வியல் பயன்பாட்டையும் நல்கியுள்ளன . நம் கையைப் பரிவுடன் பற்றிக்கொண்டு , நமக்குப் பல அதிசயங்களைக் காண்பித்துக் கொண்டும் , வழிநடத்தியும் உடன்வருகிறார் ஆசிரியர் . மனித மூளையின் பற்பல விகசிப்புகளை இனங்காட்டுகிறார் . நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் . விஞ்ஞானத் தமிழ் இலக்கியத்தில் இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க வரவு .
- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்களின் 100ஆவது நூல். சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர். சுற்றுலாவைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்திமூளைக்குள் சுற்றுலாநூல் வடித்துள்ளார். நூலாசிரியரின்இலக்கியத்தில் மேலாண்மைநூல் படித்துவிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டு இருந்தார். “இறையன்பு அவர்களே நினைத்தாலும் இதுபோன்ற நூலை எழுத முடியாதுஎன்று. இந் நூலிற்கும் அது பொருந்தும். அவரே நினைத்தாலும் இதுபோன்று இன்னொரு நூல் எழுத முடியாது. அவ்வளவு சிறப்பு. இந்த நூலில் மூளையின் செயல்பாடுகள் படித்த போது, வியந்து போனேன். கையளவு உள்ள மூளை மலையளவு செயல்புரிகின்ற விதம் கண்டு வியந்து போனேன். இந்த நூலில் மூளை மட்டுமல்ல நாடி, நரம்பு, எலும்பு, பல், இனாமல் என உடல் உறுப்புகள் அனைத்தையும் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார்.

 

பக்கங்கள் 626
விலை ரூபாய் 1500/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு

அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page