top of page

மூன்று காதல் கதைகள் | Moondru Kadhal Kathaigal-பக்கங்கள் 395

SKU: CSV0001102
₹400.00Price

மூன்று காதல் கதைகள் | Moondru Kadhal Kathaigal

நூலாசிரியர் இவான் துர்கேனிவ் | Ivan Turgenev

தமிழில் பூ சோமசுந்தரம் | Poo Somasundaram

 

" நாளை நான் இன்பம் பெறுவேனாம் ! இன்பத்துக்கு நாளை கிடையாது . அதற்கு நேற்றும் கிடையாது . கடந்த காலத்தை அது நினைவு கூர்வதில்லை . வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை . அதற்கு நிகழ்காலம்தான் உண்டு . அதுவும் நான் அல்ல , நொடிப் போது . "

முடிந்ததை நீயே எடுத்துக்கொள் , ஆனால் பிறர் கையில் மாட்டிக் கொண்டு விடாதே . தனக்கு மட்டுமே சொந்தமாய் இருப்பதில்தான் வாழ்க்கையின் மர்மம் அடங்கி இருக்கிறது . "

துர்கேனிவ் அடிப்படையில் ஒரு கவிஞர் . அதனாலேயே அவரது கதைகளின் ஒவ்வொரு காட்சிகளும் ஓவியம் போல் துல்லியமாக இருக்கும் . சின்ன சின்ன விஷயங்களும் , உணர்ச்சிகளும் மிகவும் அழகாக பிரதிபலிக்கும் . ' '
- எஸ்.ராமகிருஷ்ணன்

 

துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறு நாவல்களிலிருந்தே தொடங்குகிறார்கள், மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். துர்கேனிவ் வருணித்துள்ள நிகழ்ச்சிகள் நம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை ஆயினும், நம் காலத்தவர்களையும் நேரடியாகப் பங்குகொள்ள வைக்கின்றன. ஏனெனில் என்றும் நிலைத்திருப்பவையும் அழிக்க முடியாதவையுமான, இயல்பான மனித உணர்ச்சிகளை இவை விவரிக்கின்றன. - அர்தூர் தல்ஸ்தியகோவ்

பக்கங்கள் 395
விலை ரூபாய் 400/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page